தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் ஜட்ஜ் பிரிவில் 185 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பி.சி.,-முஸ்லிம் என்ற பிரிவுகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு ஏற்றபடி இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்:
சிவில் ஜட்ஜ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களு 01.07.2012 அன்று அடிப்படையில் வயது கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயிற்சி பெற்று வரும் பொதுப் பிரிவைச் சேர்ந்த அட்வகேட்டுகள், பிளீடர்கள், அசிஸ்டன்ட் பப்ளிக் பிராசிக்யூட்டர் பிரிவினர் குறைந்த பட்சம் 25 வயது நிரம்பியவராகவும், அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
ரிசர்வ் பிரிவைச் சார்ந்தவர்களின் அதிகபட்ச வயது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்து உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்த பட்ச வயது 22 ஆகவும் அதிகபட்ச வயது 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியைப் பொறுத்த வரை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கென்று தனி தகுதியும், தற்போதுதான் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு என்று தனித் தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. முழுமையான விபரங்களுக்கு கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்த இடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்:
சிவில் ஜட்ஜ் பதவிக்கான எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திரு நெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மையங்களில் எதிர்கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு 24.03.2012 மற்றும் 25.03.2012 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-க்கான டி.டி.,யை Registrar General, High Court of Madras என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம், டி.டி., உரிய சான்றிதழ் நகல்களைப் பின் வரும் முகவரிக்கு 20.02.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை பின் வரும் இணையதளத்தில் கட்டாயம் பார்த்துக் கொள்ளவும்.
முகவரி:
Office of the Principal Secretary to Government,
Home Department,
Fort St. George,
CHENNAI 600 009.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 20.02.2012
இணையதள முகவரி : www.tn.gov.in/announcements/Civil_Judge_Notification.pdf
0 comments:
Post a Comment